Education
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தமிழ் கனவு நிகழ்ச்சி - முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்பு
SimpliCity News Team Photos T Mohanraj · 22 Sept 2023
கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார் "எனக்குள் ஒரு தலைவன்" என்ற பொருண்மையில் கல்லூரி மாணவர்களிடையே அவர் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழின் பண்பாடு, கலைச் சிறப்புகள், தமிழரின் தொன்மை, தமிழரின் வணிகம், மாணவர்களின் எதிர்கால திட்டமிடல் போன்ற பல்வேறு தலைப்புகள் கலந்துரையாடப்பட்டன.
முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்கள் சிறுதானிய உணவு கண்காட்சிகளை சைலேந்திர பாபு பார்வையிட்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு தனியார் வங்கி நிறுவனங்கள் பங்கேற்று தொழில் கடன், தொழில் முனைவோர் குறித்தான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திக்குமார் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related stories
Videos
DGP Sylendra Babu புதிய இணைய வங்கி மோசடி பற்றி எச்சரிக்கை
25 Nov 2022
Videos
கோவை உக்கடம் காரணை வெடிப்பு சம்பவம் - குற்றவாளி 12 மணிநேரத்துக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளார் - DGP Sylendra Babu
24 Oct 2022
Videos
இந்த புதிய வருஷத்தில் ஹெல்மெட் அணிய உறுதி மொழிக்கவும் - TN DGP Sylendra Babu மக்களுக்கு ஆலோசனை
19 Dec 2021